பெண்களிடம் மோசமாக நடந்துகொண்டதை குறித்து பேசிய அசல் கோளார்..
அசல் கோளார்
பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொண்ட விஷயம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறியுள்ள அசல் கோளார் முதல் முறையாக அளித்த பேட்டியில், இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது :
" எனது குடும்பத்தினருடன் எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். மீம்ஸ்களில் வருவதை போல் நான் தப்பான நோக்கத்துடன் நடந்துகொண்டிருந்தால் அது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே தெரிந்திருக்கும். அப்படி தெரிஞ்சிருந்தால் அவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா.
பிக்பாஸ் வீட்ல அவ்ளோ கேமரா இருக்கிறது. அதற்கு மத்தியில் இதுபோன்ற செயல்களில் வேண்டுமென்றே ஈடுபடுவார்களா. நான் தெரிஞ்சு செய்யாத ஒரு விஷயத்தை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிறந்ததில் இருந்தே என்னுடைய குணம் அப்படித்தான். அது பிறருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன் " இவ்வாறு அசல் கூறியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
