நடிகர் அஜித் பட துவக்க விழாவில் பிரபல நடிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி ! அன்ஸீன் போட்டோ..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பின் அஜித்தின் திரைப்படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் அவரை திரையில் காண காத்துகொண்டு இருக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து AK 61 படத்திற்காக மீண்டும் அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் ரசிகர்களிடையே பரவி வரும்.
அந்த வகையில் தற்போது அசல் படத்தின் துவக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, அஜித், பிரபு உள்ளிட்டோர் உள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..