சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை அஷிகா ரங்கநாத்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஷிகா ரங்கநாத். இவர் கன்னடத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பட்டத்து அரசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மிஸ் யூ படத்தில் சித்தார்த் உடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் தற்போது கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை அஷிகா ரங்கநாத் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில், சேலையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:






