2ம் மனைவி உடன் விபத்தில் சிக்கிய கில்லி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.. தற்போதைய உடல்நிலை
கில்லி படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் நடித்து இருந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் ஏராளமான படங்களில் நெகடிவ் ரோல்களில் தோன்றி இருப்பவர்.
60 வயதுக்கு மேல் ஆகும்போது அவர் இரண்டாம் திருமணம் செய்தது சில வருடங்களுக்கு முன் கடும் விமர்சனங்கள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

விபத்து
நடிகரும் அவர் மனைவியும் அசாம் மாநிலம் குவஹாத்தியில் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் விபத்தில் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் சாலையை கடக்கும்போது வேகமாக வந்த வாகனம் இடித்ததில் தூக்கி வீசப்பட்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துவமனையில் இருந்து தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாங்கள் observationல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.