அதற்காக தான் 57 வயதில் 2ம் திருமணம் செய்தேன்.. கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்
கில்லி படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் பல படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.
57 வயதில் ஆஷிஷ் வித்யார்த்தி அவரது காதலி ருபாலியை 2023ல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்த வயதில் இரண்டாம் திருமணம் செய்தது பற்றி இணையத்தில் மோசமான விமர்சனங்கள் வந்தது.
ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி அளித்த லேட்டஸ்ட் பேட்டியில் தன்னை பற்றி வந்த ட்ரோல்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
இந்த வயதில் ஏன் திருமணம், லிவ் இன்-ல் இருக்கலாமே என பலரும் சொன்னார்கள். அதனால் தான் திருமணத்தை அப்படி வெளிப்படையாக கொண்டாடினோம்.
யாரோ எதோ நினைப்பார்கள் என தான் பாலரும் நினைத்த வாழ்க்கையை வாழாமல் விட்டுவிடுகிறார்கள் எனவும் ஆஷிஷ் வித்யார்த்தி கூறி இருக்கிறார்.


