விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க
நடிகர் விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சினிமா துறையில் பல முக்கிய பிரபலங்களும் கூட விஜய்யின் ரசிகர்களாக இருக்கின்றனர்.
அப்படி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தான் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ரிலீஸ் ஆன டிராகன் படம் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
விஜய் உடன் சந்திப்பு
இந்நிலையில் நடிகர் விஜய்யை இன்று அஸ்வத் மாரிமுத்து சந்தித்து இருக்கிறார். அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அஸ்வத் மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
விஜய்யை பார்த்ததும் தனது கண்கள் கலங்கிவிட்டது என கூறி இருக்கும் அவர், விஜய் உடன் பணியாற்ற வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வருவதாக கூறியுள்ளார்.
அவருடன் பணியாற்றுவது என் கையில் இல்லை, ஆனால் அவரை சந்தித்துவிட்டேன். அவர் எதிரில் அமர்ந்த போது எனக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.
"GREAT WRITING BRO என விஜய் சொல்லிவிட்டார். அது போதும்" என அஸ்வத் குறிப்பிட்டு இருக்கிறார்.

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
