இயக்குனர்களை தவறாக கூறிய விவகாரம்- அஸ்வின் கூறிய விளக்கம்
குக் வித் கோமாளி 2 என்ற நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அஸ்வின். சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் தனது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் எந்த ஒரு விஷயமும் அமையவில்லை என போராடி வந்திருக்கிறார்.
அப்போது தான் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குக் வித் கோமாளி.
நிகழ்ச்சியை முடித்த கையோடு ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி நடித்துவரும் அஸ்வின் அண்மையில் தான் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் 40 இயக்குனர்களின் கதை கேட்டு தூங்கிவிட்டேன் என கூறியிருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சையாக இதுகுறித்து அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், நான் ஆணவமாகவும், திமிராகவும் பேசவில்லை, மேடையில் இருக்கும்போது ஒருபோது குத்துமதிப்பா சொல்வோம் இல்லையா அப்படி தான் வந்தது அந்த 40 கதைகள்.
அந்த விஷயம் எதார்த்தமாக சொன்னது, யாரையும் புண்படுத்த அல்ல என கூறியுள்ளார்.