குக் வித் கோமாளி பைனல்ஸில் அஷ்வின் மற்றும் ஷகீலா பிடித்துள்ள இடம், அப்போ வின்னர் யார் தெரியுமா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குத் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடைபெற்றுள்ளது, இதன் ஒளிபரப்பு அடுத்த வாரம் ஏப்ரல் 14 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பைனல்ஸ்க்கு பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகீலா, கனி, பவித்ரா என ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் தற்போது பைனல்ஸ் யார் யார் வெற்றி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், குக் வித் கோமாளி சீசன் வின்னர் கனி என்றும் அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஷகீலா, மூன்றாவது இடத்தில் அஸ்வின் என கூறப்படுகிறது.
இதனிடையே பாபா பாஸ்கர் மற்றும் பவித்ரா எந்தெந்த இடத்தை பிடித்துள்ளனர் என விவரம் வெளியாகவில்லை.