நடிகர் அஷ்வின் படத்திற்கு கிடைத்த படுமோசமான வரவேற்பு.. அனைத்துக்கும் அந்த 40 கதை தான் காரணம்
நடிகர் அஸ்வின்
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது படத்தின் பிரஸ் மீட் மேடையில் நடிகர் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதன்முலம் நடிகர் அஸ்வின் பல இன்னல்களை சந்தித்து வந்தார். தான் கேட்ட 40 கதைகளில் அனைத்திலும் தூங்கி விட்டேன் என்று அவர் கூறியது, இன்று வரை அவருக்கு மிகப்பெரிய பாதகமாக அமைத்துள்ளது.

இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.
மோசமான TRP
இப்படத்தை ஜீ தமிழ் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்திருந்தது. இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இப்படம் 0.99 மோசமான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இதன்முலம் தற்போதுவரை அஷ்வின் சொன்ன விஷயத்தை மக்கள் மறக்கவில்லை என்று தெரிகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    