பிரபல சீரியல் நடிகை அஷ்வினியா இது? கிளாமர் உடையில் வைரல் போட்டோ
அஷ்வினி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்களும் ஒளிபரப்பாகி இருக்கிறது.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்கள் நிறைய உள்ளன, அதில் ஒன்று தான் நம்ம வீட்டு பொண்ணு. விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 478 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.
இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை அஷ்வினி அனந்திதா.
மாடலிங் துறையில் முதலில் களமிறங்கியவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க அடுத்து கிடைத்த வாய்ப்பு தான் நம்ம வீட்டு பொண்ணு.
பிறந்தநாள்
அஷ்வினி கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், அந்த மொழிகளில் சில படங்களிலும் பணியாற்றியுள்ளார். பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளில் போட்டியிட்டுள்ளார்.
தற்போது விஜய் டிவியின் தங்கமகள் தொடரில் நடித்து வரும் அஷ்வினி தனது பிறந்தநாளை கொண்டாட மலேசியா சென்றுள்ளார்.
அங்கு கொஞ்சம் கிளாமரான உடையில் அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.