இணையத்தை கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ராயின் சிறு வயது புகைப்படும்...cuteness loaded!
மாடல் துறையில் கால் பதித்து மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்று அதன்பின் சினிமா துறையில் என்ட்ரி கொடுத்து தன் வசீகர அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் பெரும்பாலாக தோன்றும் ஐஸ்வர்யா 1997-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அதே வருடத்தில் வெளியான அவர் பியார் ஹோ கயா படம் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
அதில் தொடங்கி பின் பல்வேரு மொழிகளில் பல படங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.
பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. செம்ம cute ஆக போஸ் கொடுத்தபடி தண்ணீருக்கு நடுவில் படகில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
