ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் வெளியிட்ட தனது மகளின் லேட்டஸ்ட் போட்டோ...
நடிகை அசின்
சினிமாவில் இப்போது எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், களத்தில் சாதிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.
அப்படி பல வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக களமிறங்கி இப்போது ரசிகர்களால் இவர் சினிமாவை விட்டு விலகாமல் இருந்திருக்கலாம் என ஏங்கும் ஒரு நடிகையாக இருப்பவர் தான் நடிகை அசின்.

இயக்குனர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் நடிக்க துவங்கியவர் அந்த படம் ரிலீஸ் ஆக தாமதமானதால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் வெளியானது.
அதன்பின் கஜினி, சிவகாசி, போக்கிரி, காவலன், ஆழ்வார், வரலாறு, வேல், தசாவதாரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

மகள் போட்டோ
நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். தற்போது ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் தனது மகளின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

