அசோக் செல்வனின் அடுத்த பீல் குட் மூவி

Abarna Asoke selvan
By Tony Feb 08, 2022 03:44 AM GMT
Report

Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” .

பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார். “நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.

திரு.அஜித் அந்தரே, COO Viacom18 Studios படம் குறித்து கூறுகையில்.., “Viacom18 Studios தயாரிப்பில், பல தளங்களிலும் மொழிகளிலும் தரமான கதைகள் சொல்ல முடியும் என நம்புகிறோம். எங்கள் தயாரிப்பில் சமீபத்திய தமிழ் மற்றும் தெலுங்கு படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இருமொழிகளிலும் இதயம் கவரும் ஒரு அழகான படைப்பை உருவாக்கியுள்ளோம்.

திறன் மிகுந்த நடிகர்கள், திறமையான புதிய இயக்குனர் மற்றும் அதீத திறமை கொண்ட தயாரிப்பாளர் குழுவுடன், உருவாகும் 'நித்தம் ஒரு வானம்' (தமிழ்) மற்றும் 'ஆகாஷம்' (தெலுங்கு) என இரண்டு படங்களும் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும், பல சாதனைகளை தகர்க்கும் என்று நம்புகிறோம்". தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தயாரிப்பாளர் - ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ் இயக்குநர் - Ra.கார்த்திக் ஒளிப்பதிவு - விது அய்யனா இசை - கோபி சுந்தர் கலை - எஸ். கமலநாதன் படத்தொகுப்பு - ஆண்டனி சண்டைப் பயிற்சி - விக்கி எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் - S.வினோத் குமார் நடனம் - லீலாவதி குமார் பாடல்கள் - கிருத்திகா நெல்சன் மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US