அசுரன் பட நாயகியின் மகளா இது ! அடுத்த ஹீரோயின் இவர் தான்

manju warior
By Jeeva Aug 12, 2021 06:50 AM GMT
Report

பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் திலீப் தமிழில் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர், பின்னர் 2016-ல் நடிகை காவ்யா மாதவனை திலீப் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திலீப் - மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு பிறந்த மகள் மீனாக்ஷி, இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மீனாக்ஷி சிகப்பு நிற உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், அடுத்த கதாநாயகி தயார் என கூறிவருகின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US