தனுஷின் அசுரன் பட நடிகைக்கு கொரோனா - ஷாக்கான ரசிகர்கள்

covid 19 dhanush asuran movie ammu abirami
By Kathick May 03, 2021 06:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் அம்மு அபிராமி.

இப்படத்திற்கு பின் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன் துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது ".

மேலும் " இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் '' என கூறியுள்ளார்.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US