அட்லீ - ஷாருக் கான் படத்தின் டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

atlee shah rukh khan
By Jeeva Aug 05, 2021 04:40 PM GMT
Report

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.

அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும், அன்று அப்படத்தின் ப்ரோமோ டீசரையும் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US