ரஜினியுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட வாரிசு நடிகர்.. படத்தில் இருந்து தூக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
லால் சலாம்
ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.
அதில் ’லால் சலாம்’ எனும் திரைப்படத்தில் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கிறார். இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது. பிரமாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
நடிகரை தூக்கிய ஐஸ்வர்யா
இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் அதர்வாவை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ளாராம்.
ஆனால், நடிகர் அதர்வா அதிக சம்பளமாக கேட்டதால், இப்படத்தில் இருந்து அவரே தூக்கிவிட்டு கடைசி நேரத்தில் விஷ்ணு விஷாலை கமிட் செய்தாராம் ஐஸ்வர்யா.
500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை