என் அடுத்த படத்தில் பல சுவாரஸ்யங்கள் உள்ளது.. அட்லீ கொடுத்த மாஸ் அப்டேட்
அட்லீ
தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கி புகழ்பெற்ற இவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்தார்.
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி அங்கேயும் வெற்றிக் கண்டார். தற்போது வருண் தவான்-கீர்த்தி சுரேஷை வைத்து ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் விஜய் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அட்லீ.
மாஸ் அப்டேட்
அதில், "என்னுடைய ஆறாவது கதையை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன். படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் உங்களை வந்து சேரும், அதுவரை சற்று காத்திருக்கவும்.”
”பல அதிரடி விஷயங்கள் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டு இருக்கிறது. அதில், சில விஷயங்களை கணித்திருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
அட்லீயின் ஆறாவது படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
