அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா, லேட்டஸ்ட் அப்டேட்
AA22 x A6
ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் AA22 x A6. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதுவரை இப்படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், மிருணால் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் கதாநாயகிகளாக கமிட் ஆகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அறிவிப்பு இதுகுறித்து வெளிவரவில்லை.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் இப்படத்தின் ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என கூறப்படுகிறது.