ரூ. 2000 கோடி வசூல் உறுதி.. அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் போஸ்டர் அறிவிப்பு
அட்லீ - அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பின் இயக்குநர் அட்லீயுடன் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே, இப்படம் கண்டிப்பாக இந்திய சினிமாவின் ரூ. 2000 கோடி வசூல் படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சென்சேஷ்னல் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், நடிகை அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் என ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளும் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெறித்தனமான அப்டேட்
இப்படத்தின் அப்டேட் இன்று காலை 11.00 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது வெறித்தனமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, நாளை (ஏப்ரல் 8) காலை 11.00 மணிக்கு அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்? டைட்டில் போஸ்டர் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து நாளை பார்ப்போம்.