அட்லீ, அல்லு அர்ஜுன் படத்தின் வில்லன் யார் தெரியுமா.. இரண்டு ஹாலிவுட் நடிகர்கள்
ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். அட்லீயின் 6வது திரைப்படம் இது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது. இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. ரூ. 800 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
வில்லன் ரோலில் ஹாலிவுட் நடிகர்
இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த கதாபாத்திரத்திற்காக Dwayne Johnson-னையும் பரிசளித்து வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீயின் இப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார் என்று.