அட்லீ - அல்லு அர்ஜுன் படம் பற்றி வந்த முக்கிய தகவல்.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே அட்லீ செய்யும் விஷயம்
இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இந்த் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவுப்பு வீடியோவிலேயே அட்லீ - அல்லு அர்ஜுன் இருவரும் அமெரிக்க VFX ஸ்டூடியோக்களுக்கு சென்று இருப்பதும் காட்டப்பட்டு இருந்தது. அதனால் ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரம்மாண்டமாக அட்லீ எடுக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஷூட்டிங் எப்போது
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு நடிகர்கள் எல்லோருக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக பயிற்சி பட்டறை நடத்தி ரிகர்சல் பார்க்க போகிறாராம் அட்லீ. அடுத்த மாதம் முதல் இது நடக்க இருக்கிறதாம்.
ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க அட்லீ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.