விஜய் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அட்லீ! ஹீரோ இவர்தான்?
இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அட்லீ
அட்லீ பிகில் படத்திற்கு பிறகு எந்த ஒரு புது படத்தையும் அறிவிக்கவில்லை. அவர் ஷாருக் கான் நடிப்பில் ஒரு பாலிவுட் படம் இயக்க போகிறார் என தகவல் வந்தாலும் அந்த படம் பல வருடங்கள் ஆகியும் தொடங்கவில்லை.
அது பற்றி பல தகவல்கள் தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கின்றனர். அட்லீ இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த ஒரு பதிவும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை ஏளனப்படுத்தியவர்கள் வருங்காலத்தில் வருத்தப்படுவார்கள் என அவர் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

தெறி ரீமேக்
இந்நிலையில் அட்லீ அடுத்து வருண் தவான் உடன் ஒரு ஹிந்தி படத்திற்காக கூட்டணி சேர உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் சமீபத்தில் சந்தித்து பேசி இருந்ததாகவும், விரைவில் ஒரு ரீமேக் படத்திற்காக கூட்டணி சேர போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக்காக தான் என சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.

விஜய் பாடி இருக்கும் பீஸ்ட் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் இதோ