அட்லீக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே சண்டையா! கடுப்பாகி முக்கிய விஷயத்தை தூக்கி எறிந்த விஜய் சேதுபதி
அட்லீ இயக்கத்தில் விஜய் சேதுபதி
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்மட்டுமின்றி தீபிகா படுகொண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவை அனைத்தையும் தாண்டி தளபதி விஜய் காமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே சண்டையா
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் அட்லீக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ எழுதியிருந்த காட்சியில் விஜய் சேதுபதி திருத்தும் ஒன்றை கூறியுள்ளாராம். ஆனால், காட்சியில் எந்த ஒரு திருத்தமும் செய்யமுடியாது என்று அட்லீ கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி காட்சி எழுதியிருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கேரவனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பில் நடந்துள்ள பிரச்சனையை பலரும் விஜய் சேதுபதிக்கு - அட்லீக்கும் இடையே சண்டை என்பது போல் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்பதை அவர்கள் கூறும் வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
