சமீபத்தில் அஜித் நடித்த படங்களில் அட்லீக்கு பிடித்த படங்கள் என்னென்ன தெரியுமா?

ajith atlee viswasam nerkondapaarvai
By Yathrika Aug 02, 2021 02:30 PM GMT
Report

இந்தியாவில் பாலிவுட் சினிமாவை அடுத்து மக்கள் வியந்து பார்ப்பது தமிழ் சினிமாவை தான்.

காதல், சண்டை படங்கள் என இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன், சமூகத்துக்கு தேவையான கருத்துடன் நிறைய படங்கள் வெளியாக ஹாலிவுட் வரை தமிழ் சினிமாவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இளம் இயக்குனராக அறிமுகமாகி தளபதியை வைத்து 3 படங்கள் இயக்கி இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் அட்லீ.

கடைசியாக விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை கொடுத்தார், அடுத்தபடியாக பாலிவுட் படம் இயக்குவார் என கூறப்பட்டது, ஆனால் கொரோனா காரணமாக அப்படம் குறித்து எந்த தகவலும் இல்லை.

கடந்த 2019ம் ஆண்டு அட்லீ டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ஒரு ரசிகர் அஜித் பற்றி கேட்க அதற்கு அவர், அஜித் அவர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.

அவர் சமீபத்தில் நடித்த படங்களில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்கள் பிடிக்கும் என பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் ரசிகர்களிடம் இப்போது ஷேர் ஆகி வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US