உதவி இயக்குனர்களுக்கு வீடு வாங்கி கொடுத்த அட்லீ.. பலருக்கும் தெரியாத உண்மை
இயக்குனர் அட்லீ
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார்.
ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த அட்லீ, தெறி எனும் வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என விஜய் - அட்லீ கூட்டணி வெற்றி கனிகளை பறித்தது.
இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கானின் கேரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக ஜவான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக கமல் ஹாசன் மற்றும் சல்மான் கான் இருவரும் வைத்து புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
வீடு வாங்கி கொடுத்த அட்லீ
இந்த நிலையில், அட்லீ குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இயக்குநர் அட்லீ தனது உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் சொந்தமாக ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார்.
"தான் சம்பாரித்தால் மட்டுமே போதும் என இருக்கும் இந்த திரையுலகில், தன்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனர்களுக்கு ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ" என அவர் கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
