அட்லீக்கு பல கோடிகள் நஷ்டம்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வசூல்
அட்லீ
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இப்படம் உங்களவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து அட்லீ தயாரிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் பேபி ஜான். தமிழில் விஜய் நடித்து அட்லீ இயக்கிய தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான். இப்படத்தை இயக்குனர் காலீஸ் இயக்கினார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி, ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பல கோடிகள் நஷ்டம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த கிருத்துமஸ் அன்று வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் வசூலில் செம அடிவாங்கியுள்ளது. ஆம், இதுவரை உலகளவில் ரூ. 50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.
ஆனால், இப்படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என்கின்றனர். ரூ. 150 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 50 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், இதனால் அட்லீக்கு பல கோடி நஷ்டம் என திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.