அல்லு அர்ஜுன் படத்திற்காக மாஸ் பிளான் போட்ட அட்லீ... தரமான செய்தியா இருக்கே...
அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ.
அப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்கள் இயக்கினார். இந்த படங்களின் வெற்றி அட்லீ பாலிவுட் சென்று தனது 5வது படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கினார்.
ஷாருக்கான், நயன்தாரா நடிக்க வெளியான இப்படம் ரூ. 1000 கோடி வசூல் வேட்டை நடத்தியது.
புதிய படம்
ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ யாருடன் இணைவார் என பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட அவர் புஷ்பா 2 மூலம் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிக்கண்ட அல்லு அர்ஜுனுடன் இணைந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது.
ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய VFX குழு இப்படத்தில் பணிபுரிய இருக்கும் அறிவிப்புடன் வீடியோ வெளியானது.
வரும் ஜுன் மாத இறுதியில் இப்பட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
