இயக்குனர் அட்லீயை சந்தித்த எம்.எஸ். தோனி.. வைரலாகும் புகைப்படம்..
அட்லீ
ஒரு முறையாவது இந்த இயக்குனரின் இயக்கத்தில் நாம் நடித்துவிட மாட்டோமா என நடிகர், நடிகைகள் ஏங்கும், ஒருசில இயக்குனர்களில் தற்போது அட்லீயும் இணைந்துள்ளார்.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் பாலிவுட் கவனம் முழுவதும் அட்லீ மீது தான் திரும்பியுள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தில் தற்போது பங்கேற்றுள்ள அட்லீயை பார்த்து, பாலிவுட் நடிகர்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என ரன்வீர் சிங் கூறியிருந்தார்.

இவை அனைத்திற்கும் காரணம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வெற்றி தான். ஆனால், இப்படத்திற்கு பின் அட்லீ யாரை இயக்கப்போகிறார் என இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் படம் என கூறப்படுகிறது. மறுபக்கம் விஜய்யுடன் நான்காவது முறையாக அட்லீ இணையப்போகிறார் என்றும் தகவல் வெளியாகிறது.
தோனி - அட்லீ சந்திப்பு
இந்நிலையில், அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ள அட்லீயை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி சந்தித்துள்ளார்.
அப்போது அட்லீ - பிரியா மற்றும் தோனி - சாக்ஷி இரண்டு ஜோடியும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

அட்லீ - தோனி சந்திப்பு வீடியோ..
. @Atlee_dir with Thala Dhoni ❤️? pic.twitter.com/Q9yQkp6sCo
— Kettavan Memes (@Kettavan__Memes) March 4, 2024
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri