அட்லீ மகளுக்கு ஜப்பானிய மொழியில் பெயர்! வித்தியாசமா இருக்கே
அட்லீ தற்போது இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவர். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து அவர் ராக்கா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஹாலிவுட் தரத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் உடன் அந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். மும்பையில் தான் அதன் ஷூட்டிங் நடக்கிறது என்பதால் அட்லீ மும்பையில் தற்போது செட்டில் ஆகிவிட்டார்.
அட்லீ மற்றும் அவர் மனைவி பிரியா இருவருக்கும் சமீபத்தில் இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது.

பெயர்
தனது மகளுக்கு "மியோ" (Miyou) என பெயர் சூட்டி இருப்பதாக அட்லீ தற்போது அறிவித்து இருகிறார். அது ஜப்பானிய மொழி பெயர் என்றும், அதற்கு அழகு, மென்மை மற்றும் அன்பு என்பது தான் அர்த்தம் ஆகும்.
அட்லீ பெயரை அறிவித்து இருக்கும் நிலையில், நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.