சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லாபத்தில் பங்கு கேட்ட விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்.. அலறவிட்ட பிரபலம்
சன் பிக்சர்ஸ்
தமிழ் சினிமாவின் டாப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். இவர்களுடைய தயாரிப்பில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகிறது.
இப்படத்தை நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தான் இயக்கப்போகிறாராம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இனி சம்பளம் மட்டுமில்லை, லாபத்தில் பங்கும் கேட்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம் அட்லீ.
லாபத்தில் பங்கு
ஜவான் படத்திலேயே லாபத்தில் பங்கு கேட்காமல் போய்விட்டோமே என நினைக்கும் அட்லீ, தன்னுடைய அடுத்த படத்தில் இதை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி லாபத்தில் பங்கும் கேட்டுள்ளார். இதற்கு சன் பிக்சர்ஸ் சரி என்று தலையசைத்து விட்டார்கள் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
