பல கோடிகளை போட்டு அதிநவீன வீடுகளை வாங்கும் அட்லீ, நெல்சன், விஜய் சேதுபதி.. தலைசுற்ற வைக்க வீட்டின் விலை
திரையுலக நட்சத்திரங்கள் வாங்கும் புதிய விஷயங்கள் குறித்து உடனடியாக திரை வட்டாரத்தில் பேச்சு துவங்கும்.
அப்படி தான் இந்த முறையில் முன்னணி நட்சத்திரங்கள் வாங்கியுள்ள வீடுகள் குறித்து பேச்சு எழுந்துள்ளது. சென்னையில் கிரௌன் பிளாசா ஹோட்டலை இந்த மாதத்துடன் மொத்தமாக முடிவிடுகிறார்கள்.
அதிநவீன அபார்ட்மெண்ட்
அந்த இடத்தை பிரபல ரியலெஸ்டேட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கே அதிநவீன அபார்ட்மெண்ட் வரவிருக்கிறது.
இதில் ஒரு வீட்டின் குறைந்தபட்ச விலை மட்டுமே ரூ. 10 கோடி இருக்குமாம். அப்போ அதிக பட்ச விலை எவ்வளவு இருக்கும் என்று நீங்களே சற்று நினைத்து பாருங்கள்.
அட்லீ, நெல்சன், விஜய் சேதுபதி
இந்நிலையில், இந்த அதிநவீன அபார்ட்மெண்ட்ஸ் வரக்கூடிய இடத்தில் இயக்குனர்கள் அட்லீ, நெல்சன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி வீடு வாங்கப்போகிறார்களாம்.
இவர்களை தொடர்ந்து வேறு எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் இந்த இடத்தில் வீடு வாங்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.