அட்லீயின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தின் டைட்டில் இது தானா ?
பிளாக் பஸ்டர் இயக்குனர்
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் அட்லீ இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள அனைத்து திரைப்படங்களும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி குறிப்பாக தளபதி விஜய்யை வைத்து இவர் இயக்கியுள்ள அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்து இருக்கிறது.
தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் கூட இயக்குனர் அட்லீ பிகில் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழுநீள திரைப்படம் வேண்டும் என பதிவிற்கு "பண்ணிட்டா போச்சு" என பதிலளித்து இருந்தார்.

ஷாருக் கான் அட்லீ படத்தின் டைட்டில்
இதற்கிடையே அட்லீ தற்போது ஷாருக் கான் படத்தை இயக்கி வருவது, அனைவரும் அறிந்த விஷயம். இப்படம் பல்வேறு காரணமாக தள்ளிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், அப்படத்தின் டைட்டில் ஜவான் என தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா ஜோடியாக அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே அணிந்து வந்த சேலை விலை இவ்வளவா? கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri