தனது மகனின் 2ம் வருட பிறந்தநாள்.. அழகிய குடும்ப போட்டோவை வெளியிட்ட அட்லீ, குவியும் லைக்ஸ்
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் அட்லீ.
இவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி 100 நாள் சாதனை எல்லாம் படைத்தார்.
அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என செம ஹிட் கொடுத்தவர் அப்படியே பாலிவுட் பக்கம் சென்று அங்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல் கண்டார்.
தான் தமிழில் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் வருண் தவான்-கீர்த்தி சுரேஷ் நடிக்க தயாரித்தவர் சுமாரான லாபத்தை கண்டார் என்கின்றனர்.
போட்டோ
தற்போது விளையாட்டு துறையில் களமிறங்கியுள்ள அட்லீ அடுத்து யாரை இயக்கப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் அட்லீ தனது மகனின் 2வது பிறந்தநாளில் வாழ்த்து கூறி அழகிய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ போட்டோ,