Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம்

By Sivaraj Jul 26, 2026 03:40 AM GMT
Report

அனிமே தொடராக சக்கைபோடு போட்ட Attack on Titan: The Last Attack திரைப்படமாக எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

கதைக்களம்

இராட்சத மனித உருவத்தில் இருப்பவர்கள் டைட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சாதாரண மனிதர்களை உயிருடன் பிடித்து சாப்பிடுபவர்கள் ஆவர். இவர்களிடம் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பிரம்மாண்ட சுவர்களை எழுப்பி, அதற்குள் தங்களது உலகை அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஆனால், பிரம்மாண்ட கொலோசல் டைட்டனால் மனித இனம் வேட்டையாடப்படுகிறது. டைட்டன்களை எதிர்கொள்ள சில படைகள் உருவாக்கப்படுகின்றன. எரெனின் தாய் டைட்டன் ஒன்றினால் கொல்லப்பட, அவர் அவற்றை அழிக்க தனது நண்பர்களுடன் படை ஒன்றில் சேருகிறார்.

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

ஒரு கட்டத்தில் எரென், ரம்ப்பிங் என்ற கொலோசல் டைட்டன்களின் ஊடுருவலை தொடங்கிவிட மக்கள் அலறியடித்து உயிரை காப்பற்றிக்கொள்ள ஓடுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த ஒட்டுமொத்தமாக அரசாங்கங்கள் தயாராகின்றன.

அந்த டைட்டன்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன; ஆனால் எந்த டைட்டனும் அதனால் சாகவில்லை. அதே சமயம் பல வகையான டைட்டன்கள் வேறொரு இடத்தில் களமிறங்க பெரிய சண்டை நடக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? மக்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதிக்கதை.

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

படம் பற்றிய அலசல்

பல ஆண்டுகளாக Attack on Titan திரைப்படம் வருவதாக கூறப்பட்ட நிலையில், அனிமே ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த Attack on Titan: The Last Attack திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு கண்டிப்பாக Attack on Titan சீரிஸின் கதைக்களம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு புரியும் என்பதுதான் சிக்கல். இது ஒருபுறம் இருக்க, திரைப்பட வடிவமாக ரசிகர்கள் கொண்டாடப்படக்கூடிய வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

ரெய்னர், ஆனியின் சண்டைக்காட்சிகள் மிரள வைக்க திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. ரம்ப்லிங் நடக்கும்போது மனிதர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுவதும், பலர் இறப்பதும் கண்டிப்பாக மனதை கணக்க வைக்கும். டைட்டன்களிடம் இருந்து விமானம் மூலம் தப்பிக்கும் முயற்சியில் நடக்கும் ட்விஸ்ட் செம.

அதனைத் தொடர்ந்து நடக்கு சண்டையும் மிரட்டல். பல டைட்டன்கள் உள்ளே வர, அவற்றை எதிர்த்து அருமின் உடைய படை போரிடும் காட்சிகள் அலப்பறைதான். எரென், மிகாஸாவின் காதல் காட்சிகள் ஒரு மெல்லிய உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

ரம்ப்லிங்கின்போது குழந்தை ஒன்றை காப்பாற்ற அது கைமாறுவது பாகுபலியை நினைவுபடுத்தும். டெக்னிக்கலாக கூற வேண்டும் என்றால், திரை வடிவிற்கு ஏற்ப படம் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. பின்னணி இசை மற்றும் சவுண்டிங் சிறப்பு. 

க்ளாப்ஸ்

திரைக்கதை வடிவம்

கிளைமேக்ஸ்

சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

அதீத வன்முறை

மொத்தத்தில் இந்த Attack on Titan: The Last Attack அனிமே ரசிகர்களுக்கு திரை விருந்து. 18+ வயதினர் கண்டிப்பாக பார்க்கலாம். 

Attack on Titan: The Last Attack (anime): திரை விமர்சனம் | Attack On Titan The Last Attack Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US