ரீ ரிலீஸான அட்டகாசம்.. பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வசூல்
அட்டகாசம்
அஜித்தின் அட்டகாசம் படம் கடந்த மாதம் 28ஆம் தேதி ரீ ரிலீஸானது. திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கிறது.

புதிய திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை விட, ரீ ரிலீஸ் படங்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இதனால் திரையரங்கம் திருவிழா கோலமாக மாறுகிறது.

அப்படி சமீபத்தில் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட ரீ ரிலீஸ் திரைப்படம்தான் அட்டகாசம். சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

வசூல்
21 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸான நிலையில், ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ள அட்டகாசம் படம் 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரீ ரிலீஸில் ரூ. 1.55 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
