இனி ப** அக்கானு கூப்பிட மாட்டாங்க.. பிக் பாஸில் நுழைந்த அரோரா சின்க்ளேர்
பிக் பாஸ் 9ம் சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள். முதல் போட்டியாளராக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வந்திருக்கிறார்.
அடுத்து இரண்டாவது போட்டியாளராக இன்ஸ்டா பிரபலம் அரோரா சின்க்ளேர் வந்திருக்கிறார். அவர் விஜய் சேதுபதியிடம் பேசும்போது தனது இமேஜ் பிக் பாஸ் மூலமாக மாறப்போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.
முந்தைய சீசன் போட்டியாளரான ரியா தியாகராஜன் அரோராவின் நெருங்கிய தோழி என்பதால், அவரிடம் எதாவது அட்வைஸ் வாங்கினீங்களா என விஜய் சேதுபதி கேட்டார்.
அவர் ஆம் என சொல்ல, 'அது பொய்.. பொய்' என பார்வையாளர்கள் உடன் அமர்ந்திருந்த ரியா கூறினார்.
இனி அந்த பெயரில் கூப்பிட மாட்டாங்க..
அதன் பின் தொடர்ந்து பேசிய ரியா, 'அரோராவை இப்போது (ப** அக்கா) ஒரு பெயர் வைத்து எல்லோரும் சொல்கிறார்கள். அந்த பெயரை சொல்லி, அவரது தோழி தானே நீங்க என என்னிடமே கேட்கிறார்கள்.'
'இனி அந்த பெயர் மாறும், அதை கூப்பிட மாட்டாங்க' என ரியா நம்பிக்கையாக விஜய் சேதுபதியிடம் கூறி உள்ளார்.

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
