மீண்டும் நடிக்க வந்த அவளும் நானும் சீரியல் நடிகை மௌனிகா- எந்த ஹிட் சீரியலில் தெரியுமா?

Back to acting Avalum Naanum Serial Actress Mounika
By Kumar Apr 05, 2021 11:30 AM GMT
Report

திரைப்பட நடிகைகளை தாண்டி மக்களிடம் இப்போது சீரியல் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.

ஒரு சீரியலில் வந்தாலும் அவர்களை மக்கள் அதிகம் கவனித்து விடுகிறார்கள்.  

அப்படி விஜய் தொலைக்காட்சியில் அவளும் நானும் என்கிற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மௌனிகா.

அந்த சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து எல்லோர் மனதிலும் இடம் பெற்றார். சீரியலுக்கு பின் அவர் கலைஞர் தொலைக்காட்சி பூவே செம்பூவே என்கிற சீரியலில் நடித்தார்.

ஆனால் அவ்வளவாக அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை, கொரோனா வந்து அப்படியே நிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் ஒரு மெகா ஹிட் சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிகை மௌனிகா நடிக்கவுள்ளார்.

அதாவது மகராசி சீரியலில் ஒரு புத்தம் புதிய கதாபாத்திரம் மூலம் மீண்டும் மக்களை கவர வருகிறாராம். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US