17 வயது சிறுவன் வைத்த காதல் கோரிக்கை... சீரியல் நடிகை அவந்திகா கொடுத்த பதில்
அவந்திகா
வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்களிடம் அதிக மவுசு உள்ளது.
அப்படி மலையாள சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வருபவர் தான் அவந்திகா மோகன். தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அவந்திகா சில படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
நடிகை பதிவு
இந்த நிலையில் நடிகை அவந்திகாவிற்கு 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அவந்திகா தனது பதிவில், என் சிறுவயது ரசிகனுக்கு, நீ என்னை விட வயதில் சிறியவன்.
நீயும் சில நாட்களாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறாய், நேர்மையாக உன்னிடம் ஒன்று சொல்கிறேன், 16 அல்லது 17 வயது சிறுவன் நீ. வாழ்க்கை என்னவென இப்போது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும்.
நீ, என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மெசேஜ் அனுப்பி வருகிறாய். திருமணத்தைப் பற்றி அல்ல, நீ தேர்வுகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய வயது இது.
நாம் திருமணம் செய்துகொண்டால், கணவன் - மனைவி என்று அழைக்கமாட்டார்கள், என்னை உன் அம்மா என்றே அழைப்பார்கள். எனவே, நீ படிப்பில் கவனம் செலுத்து, சரியான நேரத்தில் காதல் உன்னை தேடிவரும்.
சரியான நேரத்தில் உன் காதல் கதை உனக்கு உனக்காக உருவாகும், அன்பும் ஆசிர்வாதங்களும் என பதிவு செய்துள்ளார்.