அட்டகாசமாக வந்த Avatar Fire And Ash திரைப்படத்தின் முதல் விமர்சனம்
Avatar Fire And Ash
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அவதார்.
உலகளவில் அதிகம் வசூலித்த படமான இதன் அடுத்த பாகம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் 2022ம் ஆண்டு 160 மொழிகளில் வெளியானது. இப்போது அவதார் 3ம் பாகம் Fire And Ash என்ற பெயரில் தயாராகி வருகிறது.

சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 18ம் தேதி இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விமர்சனம்
விஷுவல் ட்ரீட்டாக இப்படம் இருக்கும். காட்சி ரீதியாக பிரம்மாண்டமானது, சிறந்த உணர்ச்சிபூர்வமான கதையாக உள்ளது.
Visual Effectsகாக இப்படம் ஆஸ்கர் வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் அருமையான படம், திருப்திகரமாக உள்ளது என ஹாலிவுட் பட விமர்சகர் Nick Zednik பதிவு செய்துள்ளார்.
