மூன்று நாட்கள் வசூலில் பல்லாயிரம் கோடிகளை கடந்த அவதார்.. எவ்வளவு தெரியுமா
அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.
இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த நேற்றுடன் மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 3,500 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 2,500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள அவதார் இதுவரை ரூ. 3,500 கோடியை வசூல் செய்துள்ள நிலையில், விரைவில் இன்னும் பல்லாயிரம் கோடிகளை கடந்து வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
