Awarapan 2: திரை விமர்சனம்

By Sivaraj Aug 15, 2026 07:30 AM GMT
Report

2007யில் வெளியாகி பிளாப் ஆன பின்னர், கல்ட் ஸ்டேட்டஸ் பெயர் பெற்ற Awarapan படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

கதைக்களம்

இந்தியாவின் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கேங்ஸ்டராக இருந்த ஷிவம் பண்டிட் (இம்ரான் ஹாஷ்மி). இறந்துபோன தனது காதலி ஆலியாவின் (ஷ்ரியா சரண்) கல்லறைக்கு கல்லறைக்கு அருகில் பெண் குழந்தை ஒன்றை கண்டெடுக்கிறார் ஷிவம்.

அந்த குழந்தைக்கு காதலியின் பெயரை சூட்டும் பண்டிட், அது சிறுமியாக வளர்ந்த பின் தன்னால் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியாது என நினைத்து ஒரு தம்பதிக்கு தத்துக்கொடுக்கிறார்.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

ஆனால், அந்த தம்பதி கொலை செய்யப்பட்டு சிறுமி ஆலியா பேங்காக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவளுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் அங்கு சிறைப்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் அதிகாரி ஷிவமிடம் கூறுகிறார்.

அவரின் உதவியுடன் ஆலியாவை காப்பாற்ற களமிறங்கும் ஷிவம், பேங்காக்கிற்கு சென்ற பின் ஒரு சண்டையில் ஸோராவர், சிக்கந்தர் மற்றும் அவரது சகோதரி ஸாரா (திஷா பதாணி) ஆகியோரை காப்பாற்றுகிறார். அதன் விளைவாக கடத்தல் கும்பல் தலைவனான ஸோராவருக்காக வேலைபார்க்க ஆரம்பிக்கிறார் ஷிவம். அவரது பிடியில் உள்ள ஆலியா உட்பட 40 குழந்தைகளை ஷிவம் எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

படம் பற்றிய அலசல்

சைப் அலி கானை வைத்து ஜவானி ஜானெமன் படத்தை எடுத்த நிதின் காக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையை பெரிய கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்ற தெரிந்த கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.

திரைக்கதை இப்படித்தான் செல்லும் என்று தெரிந்தாலும், முதல் பாகத்தில் வடிவமைக்கப்பட்ட ஷிவம் பண்டிட் என்ற கதாபாத்திரம் இந்த வேலையை எப்படி செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருப்பதுதான் இப்படத்தின் பலமே. என்றாலும், இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக திரைக்கதையை வடிவமைத்திருக்கலாம்.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களை பல படங்களில் பார்த்த நியாபகம் வருவதால், ஒன்றிரண்டு மட்டுமே ஒர்க்அவுட் ஆகியுள்ளன. திரைக்கதை ஒரு பக்கம் சென்றாலும், ஷிவம் பண்டிட் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சில லாஜிக் மீறல்களையும் மன்னிக்க வைக்கிறது.

இருந்தாலும் ஷிவம் எத்தனை அடி வாங்கினாலும் கல்லு மாதிரி நிற்பதெல்லாம் ரொம்ப ஓவர். எதிர்பார்த்த கிளைமேக்ஸ் என்றாலும் திருப்திகரமாகவே முடிகிறது. ஷிவம் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மி மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆவேசம், எமோஷனல் காட்சிகளில் நெகிழ்ச்சி என ஸ்கோர் செய்து மொத்த படத்தையும் தோளில் தாங்கியிருக்கிறார்.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

அவருக்கு ஈடுகொடுக்க வேண்டுமே என பூரன் கேபி நடிப்பில் கொஞ்சம் ஓவர்டோஸ் செய்தாலும், வில்லத்தனத்தில் அலறவிடுகிறார். ஸாராவாக வரும் திஷா பதானி கவர்ச்சியைத் தாண்டி கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

ஷாபனா, சுவிந்தர் போன்ற நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம்; தேவேந்திராவின் படத்தொகுப்பு கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். விஷ்ணு ராவின் ஒளிப்பதிவு சிறப்பு.

க்ளாப்ஸ்

இம்ரான் ஹாஷ்மி

ஒரு சில ட்விஸ்ட்

சண்டைக்காட்சிகள்

இசை

பல்ப்ஸ்

தெரிந்த கதைக்களம், சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் இந்த Awarapan 2 ஒரு டீசண்டான வாட்ச்சிங் படம்.

Awarapan 2: திரை விமர்சனம் | Awarapan 2 Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US