வசூல் வேட்டையில் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் படங்களில் வசூல்.. எவ்வளவு தெரியுமா..
மிஷன் சாப்டர் 1
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று மிஷன் சாப்டர் 1. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படமும் இதுவே ஆகும்.
அருண் விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகி வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், கண்டிப்பாக மிஷன் படத்தின் சாப்டர் 2 வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆக்ஷன் காட்சிகள் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக சிறைக்குள் நடக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அருண் விஜய் மிரட்டி விட்டார் என பலராலும் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் மிஷன் திரைப்படம் உலகளவில், ரூ. 18 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.
கேப்டன் மில்லர் - அயலான்
இப்படம் வெளிவந்த அதே நாளில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய தமிழ் படங்களும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களின் வசூல் குறித்தும் பார்க்கலாம்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இப்படம், இதுவரை உலகளவில் ரூ. 76 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் உலகளவில் ரூ. 70.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
