அயலான் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. சிவகார்த்திகேயனின் சிறப்பான தரமான சம்பவம்
அயலான்
இந்த பொங்கள் தமிழ் சினிமாவிற்கு செம கலெக்ஷ்ன் என்று தான் சொல்லவேண்டும். தமிழில் இருந்து வெளிவந்து மூன்று திரைப்படங்களும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிநடைபோட்டு வருகிறது.

அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அயலான். பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்துள்ள இப்படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகளை அயலான் மிகவும் கவர்ந்துள்ளது. முதல் நாளில் இருந்து மளமளவென அதிகரித்துக்கொண்டே வரும் அயலான் படத்தின் வசூல் நான்கு நாட்களில் ரூ. 50 கோடியை கடந்துள்ளது. இதை அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வசூல் வேட்டையில் அயலான்
இந்நிலையில் அயலான் திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 எப்படி கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிமுருகன் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்ததோ, அதே போல் அயலானும் எதிர்பார்த்ததை விட சிறந்த வெற்றியை தேடி கொடுத்துள்ளது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    