சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
அயலான்
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்தவர் ரவிக்குமார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு இடையே இப்படம் சிறந்த வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல் விவரம்
இந்நிலையில், அயலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் அயலான் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu