லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்கினாரா அயலான் பட பிரபலம்?
அயலான்
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வருகிற ஜனவரி 12 ம் தேதி வெளியாகவுள்ளது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் தயாரிப்பாளர், KJ ராஜேஷ், "அயலான் திரைப்படம் ஏற்கனவே ஒரு பிளாக்பஸ்டர். நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். போதை பொருள் பவுடர், ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புகிறவர்கள் அல்ல" என்று KJ ராஜேஷ் கூறியுள்ளார்.
இவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜை தான் மறைமுகமாக இப்படி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri