அயலான் தமிழ்நாடு பிஸினஸ் மட்டும் இத்தனை கோடிகளா?- வேறலெவல் சிவகார்த்திகேயன்
அயலான் படம்
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான்.
24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட், கொரோனா என பிரச்சனைகளில் சிக்கியிருந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகிறது இப்படம்.
பட பிஸினஸ்
இந்நிலையில் அயலான் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 40 கோடி பிஸினஸ் செய்துள்ளார்களாம்.
கண்டிப்பாக இவை மிகப்பெரிய பிஸினஸ் தான் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில், அதோடு பெரிய தொகை வசூல் செய்தால் மட்டுமே படம் லாபத்தையும் எட்டும் என்று கூறப்படுகிறது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்பளமே இல்லாமல் நடித்துள்ளாராம்.