கேப்டன் மில்லர் படத்தை பின்னுக்கு தள்ளிய அயலான்.. 7 நாட்கள் வசூல் விவரம்
இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் இருந்து மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் மூன்று படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அயலான் - கேப்டன் மில்லர்
இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படங்களின் வசூல் வேட்டை முதல் நாளில் பட்டையை கிளப்பி வருகிறது. அயலான் மற்றும் கேப்டன் மில்லர் இரு திரைப்படங்களுக்கும் ரூ. 50 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
7 நாட்கள் வசூல் விவரம்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் அயலான் திரைப்படம் கடந்த 7 நாட்களில் உலகளவில் ரூ. 63 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் இருந்து கேப்டன் மில்லர் வசூலை விட குறைவான வசூலை பெற்று வந்த அயலான், தற்போது 7 நாட்கள் முடிவில் கேப்டன் மில்லர் படத்தை வசூல் ரீதியாக பின்னுக்கு தள்ளியுள்ளது என்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூலில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்த போகிறது என்று.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan