மாபெரும் வசூல் வேட்டையில் அயலான்.. இரண்டு நாட்களில் எவ்வளவு தெரியுமா
அயலான்
பொங்கல் பாண்டியை முன்னிட்டு பல முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளிவந்துள்ளது.
இதில் தமிழில் இருந்து வெளிவந்த கேப்டன் மில்லர், மிஷன் மற்றும் அயலான் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் அயலான்.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வசூல் வேட்டை
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அயலான் படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
