மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய அயலான்.. உலகளவில் எவ்வளவு வசூல் தெரியமா
அயலான்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படங்களில் ஒன்று அயலான். இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஏலியனை மையமாக கொண்டு இப்படத்தை உருவாகியுள்ளனர். இதுவே இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட, குடும்ப ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துவிட்டது. குறிப்பாக குழந்தைகள் அயலான் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
மூன்று நாள் வசூல்
இந்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அயலான் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வரும் அயலான் திரைப்படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் இன்னும் கூடும் என சொல்லப்படுகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    